சேலம்

சேலம் மணியக்காரனூர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு…

சேலம்:-

சேலம் மணியக்காரனூர் பகுதியில் ரூ. 5.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தொட்டியை ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் திறந்து வைத்து குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா மணியக்காரனூர் பகுதியில் சுமார் 100-க்கும் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெகுதூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து சிரமப்பட்டு வந்தனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக விவசாய நிலம் மற்றும் குடிநீர் கிணறுகள் எதுவும் கிடையாது.

இந்நிலையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தரும்படி தமிழக அரசிடம் மனு அளித்தனர். இதனையடுத்து முதல்வர் மற்றும் துணை முதல்வரின் ஆணையின்படி இந்த கிராமத்திற்கு ஓமலூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்த கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து அனைத்து வீடுகளுக்கு தனித்தனியாக குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் திறந்து வைத்து குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.