சிறப்பு செய்திகள்

ஜனவரி 4-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக மூடப்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 4-ந்தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் 23-ந்தேதி முடிவடைந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டது. ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும், அன்றே மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர் 3-ந்தேதி என மாற்றப்பட்டது.

இந்நிலையில் விடுமுறைக்காக மூடப்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் ஜனவரி 4-ந்தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை  அறிவித்துள்ளது.