இந்தியா மற்றவை

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…

குல்காம்:-

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்பரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் தங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளதை அறிந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.