தற்போதைய செய்திகள்

ஜவஹர்லால் நேரு131-வது பிறந்தநாள் விழா : ஆளுநர் & அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

சென்னை:-

பண்டித ஜவஹர்லால் நேருவின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் ஆகியோர், சென்னை, கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு  காலை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழ் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி, தமிழக அரசின் சார்பில் பண்டித ஜவஹர்லால் நேருவின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள பண்டித ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு  காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா.வளர்மதி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.இரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.