திருவண்ணாமலை

ஜவ்வாதுமலை கோடைவிழா 15-ந்தேதி தொடக்கம் – அமைச்சர்கள் துவக்கி வைக்கிறார்கள்…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் 22-வது ஜவ்வாதுமலை கோடை விழா-2019 15.06.2019 மற்றும் 16.06.2019 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. இந்த விழாவை அமைச்சர்கள் துவக்கி வைக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனாமரத்தூரில், வேலூர் சாலையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்கா அருகில், திறந்தவெளி மைதானத்தில் 22-வது ஜவ்வாதுமலை கோடை விழா-2019 வரும் 15.06.2019 (சனிக்கிழமை) மற்றும் 16.06.2019 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு 15.06.2019 (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் கோடை விழாவை துவக்கி வைத்து, அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைக்கின்றனர்.

பின்னர்அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அரசு தலைமைச் செயலாளர், ஆணையர் சுற்றுலாத்துறை மற்றும் வேளாண்மை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அபூர்வ வர்மா, மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்சதசாமி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநதிகள் பங்கேற்கின்றனர்.

அமைச்சர்கள் 22-வது ஜவ்வாதுமலை கோடை விழாவில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள், வளர்ச்சிப்பணிகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, கூட்டுறவுத் துறை, சமூகநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, பழங்குடியினர் நலன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம், பட்டு வளர்ச்சித்துறை, உணவு பாதுகாப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு), மீன்வளர்ச்சிக் கழகம், சுற்றுலாத் துறை, செய்தி-மக்கள் தொடர்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம், ஆகிய துறைகளின் சார்பாக அமைக்கப்படவுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிடுகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஜமுனாமரத்தூரில் நடைபெறும் 22-வது ஜவ்வாதுமலை கோடை விழாவில் மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயனிகள் மற்றும் பொதுமக்கள் என பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மலைவாழ் மக்களின் பாரம்பரியம் மற்றும் சிறப்புகளை விளக்கும் வகையில் பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், விளையாட்டுகள், உணவு வகைகள், மலையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள் உட்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய உள்ளுர் சந்தை ஆகியவை இடம் பெறுகிறது.