இந்தியா மற்றவை

ஜாமீன் கோரி நீரவ் மோடி மீண்டும் மனு தாக்கல்..

வைர வியாபாரி நீரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு லண்டன் நீதிமன்றத்தில் மூன்றுமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம்  கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக நீரவ் மோடி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். லண்டனில் கைதான நீரவ் மோடி, தம்மை ஜாமீனில் விடுவிக்கக் கோரிய மனுக்களை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் ஏற்கனவே மூன்று முறை நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், ஜாமீன் கோரி இங்கிலாந்து-வேல்ஸ் உயர்நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு அளித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.