இந்தியா மற்றவை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

ஜார்க்கண்டில் 3-வது கட்டமாக 17 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

ஜார்க்கண்டில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதாவும், ஆட்சியை கைப்பற்ற ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியும் கடுமையாக போராடி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.