தற்போதைய செய்திகள்

ஜி 20 மாநாடு : தென்கொரிய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு…

ஒசாகா:-

ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி -20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.

அந்த வகையில், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் – பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பரஸ்பரம் இருநாடுகளின் நலன்கள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.