இந்தியா மற்றவை

ஜூன் 30-ந்தேதி பிரதமர் மோடி மீண்டும் ரேடியோவில் பேசுகிறார்…

புதுடெல்லி:-

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து ரேடியோவில் ‘மனதின் குரல்’ (மான் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு ரேடியோவில் உரையாற்றி வந்தார். இந்த நிகழ்ச்சி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகியது.

கடந்த பிப்ரவரியில் இறுதியாக மோடி பேசினார். பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகி விட்டார்.

எனவே மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில் ரேடியோவில் மீண்டும் பேசுகிறார். அவரது பேச்சு வருகிற 30-ந்தேதி ஒலிபரப்பாகிறது. இதற்கு முன்பு இறுதியாக கடந்த பிப்ரவரியில் பேசிய போது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி மீண்டும் ரேடியோவில் பேசுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.