தற்போதைய செய்திகள்

டாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து

சென்னை

டாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ச.ம.க. தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் காவேரி பிரச்சனைக்குத் தீர்வு, அண்டை மாநிலங்களுடன் சுமூக உறவு, வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு, மக்கள் நலத்திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால் முதல்வருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதை வரவேற்று முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமிக்கு என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் டாக்டர் பட்டம் பெற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலர் சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.