இந்தியா மற்றவை

டில்லியில் புழுதிப் புயல்: 27 விமானங்கள் ரத்து…

புதுடில்லி:-

இந்திய தலைநகர் புதுடில்லியில், இன்று மாலை வீசிய திடீர் புழுதிப் புயலின் காரணமாக, மக்கள் கடும் அவதியடைந்தனர். 27 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

டில்லி, இந்தியா கேட் மற்றும் ஜன்பத் சாலை பகுதிகளில் இன்று மாலை திடீரென புழுதிப் புயல் வீசியது. இதனால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதே நேரத்தில், பல பகுதிகளில் மழையும் பெய்தது.

புழுதிப்புயல், மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்திற்கு மாலை வந்து செல்லும் 27 விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டன. பல விமானங்கள் புதுடில்லி பயணத்தை ரத்து செய்தன.