விளையாட்டு

டி-20யில் 9 ரன்களுக்கு மிசோரமை சுருட்டிய மத்திய பிரதேச அணி…

மாநிலங்களுக்கு இடையேயான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், மிசோரம் அணியை 9 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கி மத்திய பிரதேச அணி சாதனை வெற்றியைப் பெற்றுள்ளது.

புதுச்சேரி பால்மைரா மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட் செய்த மிசோரம் அணி, 13.5 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. மேலும் மத்திய பிரதேசத்தின் அபாரமான பந்துவீச்சால், மிசோரம் அணியில் 9 பேர் ரன் கணக்கைத் தொடங்காமலேயே டக் அவுட்டும் ஆகினர்.

10 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய மத்திய பிரதேசம் ஒரே ஓவரில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தனதாக்கியது.