தற்போதைய செய்திகள்

டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பயணச்சீட்டு – சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பொதுமக்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச்சலுகை அட்டை விற்பனை மையங்களில், ஒவ்வொரு மாதமும், ஏறத்தாழ 2 லட்சத்து, 61 ஆயிரம் பயணிகள் நேரிடையாக பணம் கொடுத்து தங்களது பயணச் சலுகை அட்டையினை பெற்றுக் கொள்கிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி, மின்னனு பணப்பரிவர்தனையை ஊக்குவிக்கின்ற வகையில், மாநகர போக்குவரத்து கழக வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்பட்டு வரும் 29 விற்பனை மையங்களிலும் Swiping Machine (Point of Sale) வாயிலாக பணம் செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில், பயணிகள் தங்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்து விற்பனை மையங்களிலும், பயணச் சலுகை அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.