இந்தியா மற்றவை

டெல்லியில் பஸ்- மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு கட்டணம் கிடையாது – முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு…

புதுடெல்லி:-

டெல்லியில் பஸ், மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் பெண்கள் மெட்ரோ ரயில் மற்றும் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அதிக கட்டணம் என்பதற்காக எக்ஸ்பிரஸ் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய முடியாத பெண்களுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. எனினும், டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் அளவுக்கு வசதி படைத்த பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் உண்மையிலேயே தேவைப்படும் பெண்களுக்கு இந்த சலுகையை விட்டுக்கொடுக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த திட்டத்தால் டெல்லி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.