தமிழகம்

டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு புதிய வலைதளம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 27.2.2019 அன்று தலைமைச் செயலகத்தில், பொதுத்துறை சார்பில் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அறைகளை முன்பதிவு செய்யும் இணையதள வசதியுடன் தமிழ்நாடு அரசினால் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் முன்மொழிவுகள் மற்றும் திட்டங்களை கண்காணித்து தொடர் நடவடிக்கை எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள www.tnhouse.tn.gov.in என்ற வலைதளத்தை துவக்கி வைத்தார்.

இந்த வலைதளம் மூலம், புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தங்குவதற்காக அறை ஒதுக்கீடு கோரிக்கைகளை விண்ணப்ப வரிசை, கட்டணம் குறித்த விவரங்கள், அறை ஒதுக்கீடு, வாகன வசதி போன்ற விவரங்களுடன் விருந்தினர்களின் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புதல் மற்றும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுக்கு அனுப்பும் முன்மொழிவுகள் மற்றும் திட்ட அனுமதிகள் குறித்து துறைவாரியாக பதிவேற்றம் செய்து, அவற்றினை உடனுக்குடன் கண்காணித்து, தொடர் நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் ஒப்புதல் பெற்றிட மாநில அரசு துறைகள் மற்றும் தமிழ்நாடு இல்லம் மூலம் ஒருங்கிணைந்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த இணையதளம் வழிவகை செய்யும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் பி.செந்தில் குமார், தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர் ஹித்தேஷ் குமார் எஸ்.மக்வானா, தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் வச்சானி, பொதுத் துறை துணைச் செயலாளர் (மரபு) டி.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.