விளையாட்டு

டோனியின் கையுறையில் இருப்பது ராணுவ முத்திரை இல்லை : ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி விக்கெட் கீப்பர் டோனி ராணுவ முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்தியதாகவும், அதனை நீக்க கோரியும் பிசிசிஐக்கு ஐசிசி கடிதம் எழுதி இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து  கூறி உள்ள  பிசிசிஐ நிர்வாக குழு தலைவர் வினோத் ராய்,
டோனியின் கையுறையில் இருப்பது ராணுவ முத்திரை இல்லை என்றும், அதனை டோனி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி ஐசிசிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறினார். மேலும், ஐசிசியின் விதிமுறைகளை டோனி மீறவில்லை என்றும் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.