விளையாட்டு

டோனியின் 38-வது பிறந்தநாள் கொண்டாட்டம் – வீரர்கள் வாழ்த்து…

லண்டன்:-

இந்திய கிரிக்கெட் வீரர்டோனி தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

உலக கோப்பையில் விளையாடி வரும் டோனி லீட்ஸ் நகரில் மனைவி சாக்ஷி, மகள் ஸிவா மற்றும் சக வீரர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். ஹர்திக் பாண்டியா, கேதர்ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அவருக்கு முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விராட்கோலி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

டோனிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம்பிக்கை மற்றும் மரியாதையின் அர்த்தங்களை ஒருசிலர் மட்டுமே புரிந்து கொள்கிறார்கள். பல வருடங்களாக டோனியுடன் நட்பில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எங்கள் அனைவருக்குமே அவர் மிகப்பெரிய சகோதரர். நான் ஏற்கனவே கூறியது போல டோனி எனக்கு எப்போதுமே கேப்டன் ஆவார்.

ஷேவாக் கூறும்போது, “டோனியின் பிறந்த தேதி, மாதம், விளையாட்டு சீருடை அனைத்து எண்ணும் 7 தான். 7 கண்டங்கள், வாரத்தில் 7 நாட்கள், வானவிலில் 7 வண்ணங்கள், 7 அடிப்படை இசை குறிப்புகள், 7 சக்கரங்கள், 7 உலக அதிசயங்கள் என அவரது பிறந்தநாளும் கிரிக்கெட் உலகின் அதிசயமாக திகழ்கிறது” என்று பாராட்டினார்.