இந்தியா மற்றவை

தமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத் தகவலில், வடகிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.

எனவே, வடக்கு, தெற்கு வங்கக்கடல், லட்சத்தீவு கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் 196 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை பரவலாக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.