தமிழகம்

தமிழகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள், ஆட்சியர்கள், காவல்துறையினருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை…

சென்னை:-

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, சென்னை கிண்டியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில், 32 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லவசா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் விநியோகம் செய்வதை தடுப்பது, தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.தேர்தல் பறக்கும் படையினரால் பல்வேறு இடங்களில் அதிக அளவில் பணம் கைப்பற்றப்பட்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள், கூடுதல் துணை ராணுவம் தேவைப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறியப்படுகிறது.அரசியல் கட்சியினர் தெரிவித்த புகார் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இன்று மாலை 7 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது