தமிழகம்

தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இயல்பை விட 2 அல்லது 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில், 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.