தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கழக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி…

காஞ்சிபுரம்

தமிழகத்தில் கழக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைவது உறுதி என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தமிழிசை சவுந்தரராஜன் சென்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைவது உறுதி. அதனை உறுதிபடுத்துவதற்காகத் தான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசிக்க வந்துள்ளேன். தமிழகத்தில் அ.தி.அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்பதற்காகத் தான்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது 2 ஜி, நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் தொடர வேண்டும் என்பதற்காகத்தான். ஊழல் தொடர வேண்டுமா? வளர்ச்சி திட்டங்கள் தொடர வேண்டுமா? என்று சிந்தித்து மக்கள் வாக்களித்து விட்டார்கள்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பை பார்க்கும் போது பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று உறுதியாகிறது. தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. அணி வெற்றி பெறும். கழகத்தின் ஆட்சி தொடரும். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் மலரும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.