தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 38 தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு…

சென்னை

தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் சராசரியாக 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 2 சதவீதம் குறைவாகும்.
நேற்று முன்தினம் மாலை வாக்குப் பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. பிறகு அவை அனைத்தும் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 4 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மே 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.தமிழ்நாட்டில் வேலூர் தொகுதி தவிர 38 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு மொத்தம் 43 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தொகுதி வாக்குகளும் எந்தெந்த இடங்களில் எண்ணப்படுகிறது என்ற விவரம் வருமாறு:-

திருவள்ளூர் : பெருமாள்பட்டு, ஸ்ரீராம் வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி, பெருமாள்பட்டு, ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி.

வடசென்னை : காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரி.

தென்சென்னை : கிண்டி அண்ணா பல்கலைக் கழகம்.

மத்திய சென்னை : நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி.

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் ராஜலட்சுமி என்ஜினீயரிங் கல்லூரி.

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக் கழக என்ஜினீயரிங் கல்லூரி

அரக்கோணம் : வாலாஜாவில் உள்ள ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரி.

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி.

தர்மபுரி : செட்டிகரை அரசு என்ஜினீயரிங் கல்லூரி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள ரெகுலேட்டடு மார்க்கெட்டிங் கமிட்டி

ஆரணி : திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சண்முகா இன்டஸ்டிரிஸ் அரசு ேமல்நிலைப்பள்ளி

விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியியல் கல்லூரி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நீலமங்கலம் ஏ.கே.டி. என்ஜினீயரிங் கல்லூரி

சேலம் : ஓமலூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி

நாமக்கல் : இளயாம் பாளையம் விவேகானந்தா பெண்கள் என்ஜினீயரிங் கல்லூரி

ஈரோடு : சூரியம்பாளையம் ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரி

திருப்பூர் : திருப்பூர் எல்.ஆர்.ஜி.அரசு பெண்கள் என்ஜினீயரிங் கல்லூரி

நீலகிரி : ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி

கோவை : கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி

பொள்ளாச்சி : மாக்கினாம்பட்டி டாக்டர் மகாலிங்கம் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி

திண்டுக்கல் : திண்டுக்கல் சில்வர்பட்டி பல்கலைக் கழக என்ஜினீயரிங் கல்லூரி

கரூர் : தவளபாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரி

திருச்சி : பஞ்சப்பூர் சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரி

பெரம்பலூர் : பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி

கடலூர் : தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரி

சிதம்பரம் : உடையார் பாளையம் தாலுகா தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரி

மயிலாடுதுறை : மன்னம்பந்தல் ஏ.வி.சி. என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ஏ.வி.சி கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஏ.வி.சி. பாலிடெக்னிக் கல்லூரி

நாகப்பட்டினம் : திருவாரூர் கிடாரன்கொண்டான் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி

தஞ்சாவூர் : தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரி

சிவகங்கை : காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்ப செட்டியார் என்ஜினீயரிங் தொழில் நுட்ப கல்லூரி

மதுரை : மதுரை மருத்துவ கல்லூரி

தேனி : தேனி கொடவிலார்பட்டி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி

விருதுநகர் : விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி

ராமநாதபுரம் : புல்லன்குடி அண்ணா பல்கலைக் கழக என்ஜினீயரிங் கல்லூரி

தூத்துக்குடி : தூத்துக்குடி பல்கலைக் கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரி

தென்காசி : குற்றாலம் ஸ்ரீ பராசக்தி பெண்கள் கல்லூரி

திருநெல்வேலி : நெல்லை குலவணிகர்புரம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி

நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 18 தொகுதி வாக்குகள் 15 இடங்களில் எண்ணுவதற்கு ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.