தமிழகம்

தமிழகம் முழுவதும் தற்போது வரை சுமார் 50 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் – சத்யபிரதா சாஹூ…

சென்னை:-

தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 50 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 69 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் சிக்கியுள்ளதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். மக்களவை தேர்தலில் 932 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 305 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.