தற்போதைய செய்திகள்

தமிழினத் துரோகிகளுக்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள் – வாக்காளப் பெருமக்களுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள்…

மதுரை:-

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்திற்கு துரோகம் செய்த தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசினார்

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர், வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து கடச்சனேந்தல், அப்பன்திருப்பதி, வெள்ளியங்குன்றம், கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி, ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பிரச்சாரம் செய்தார்.

இந்த பிரச்சாரத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், பெரியபுள்ளான் (எ) செல்வம், மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் சி.தங்கம், ஜெ.ராஜா, எஸ்.என்.ராஜேந்திரன், அம்பலம், மாவட்ட இளைஞர்அணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் கே.முருகேசன், தக்கார்பாண்டி, பொன்னுசாமி, வெற்றிச்செழியன், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் மேலூர் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், தனம்போஸ், கழக இலக்கிய அணி இணைச்செயலாளர் வில்லாபுரம் ரமேஷ் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கழக வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தியுடனும், மலர் தூவியும் வரவேற்றனர். இளைஞர்கள் ஆரவாரத்துடன், கழக வேட்பாளரை வரவேற்றனர்

இந்த பிரச்சாரத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது:-

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளராக வி.வி.ஆர்.ராஜ்சத்யன் போட்டியிடுகிறார். இவர் அம்மாவால் இந்த இயக்க பணிக்காக அடையாளம் காட்டப்பட்டவர். இன்றைக்கு செல்லும் இடமெல்லாம் கழக வேட்பாளரை பொதுமக்கள் வரவேற்பதை கண்டு இரட்டை இலைக்கு வெற்றி உறுதியாகி உள்ளது,தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் இயக்கம் இதே தி.மு.க. செய்த அராஜகங்களை தினந்தோறும் பட்டியலிட்டு நாடகம் போட்டனர். அதையெல்லாம் மக்கள் உன்னிப்பாக கவனித்துள்ளனர். தற்போது தி.மு.க. ஏதோ உத்தமர் கட்சி போல கம்யூனிஸ்ட் இயக்கம் கூறிவருவது கேலிக்கூத்தாக உள்ளது. இதை நான் சொல்லவில்லை மக்களாகிய நீங்களே சொல்லி வருகிறீர்கள்.

இந்த பகுதி விவசாயம் சார்ந்த பகுதி. குறிப்பாக முல்லைப்பெரியாறு பாசன நீரால், நீங்கள் விவசாயம் செய்து வருகிறீர்கள் இதே தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி முல்லைப்பெரியாறுக்கு ஏதாவது குரல் கொடுத்தது உண்டா, மாறாக கேரளாவிற்கு ஆதரவாகத்தான் தி.மு.க. செயல்பட்டது. ஏனென்றால் சன் குடும்பத்தில் உள்ள டி.வி.நிறுவனங்கள் கேரளா மாநிலத்தில் உள்ளது அதை அவர்கள் பாதுகாக்க வேண்டும். இதை விட கொடுமை என்னவென்றால் கேரளாவில் உள்ள சன் குழுமத்தை சேர்ந்த டி.வியில் தமிழகத்திற்கு முல்லைப்பெரியாறு நீரை தரக்கூடாது என்ற செய்தியை ஒலிபரப்பினார்பள். இப்படிப்பட்ட துரோகிகளுக்கு மக்களாகிய நீங்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்

மேலும் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனையில் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இன்றைக்கு இருமுறை 142 அடியை நாங்கள் உயர்த்திக் காட்டியுள்ளோம். தமிழக மக்களுக்காக உழைக்கும் ஒரே அரசு, அம்மாவின் அரசு. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் மக்களுக்கு ரூ.2000 உதவித்திட்டத்தை முதலமைச்சர் துவங்கியுள்ளார். தற்போது தேர்தல் முடிந்தபின் நிச்சயம் உங்களுக்கு வழங்கப்படும்

இன்றைக்கு வலிமையான தேசமாகவும், வளமான தமிழகத்தை உருவாக்கவும், முதலமைச்சர் மக்கள் விரும்பிய ஒரு மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளார். இந்த கூட்டணியை நீங்கள் ஆதரித்து உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு அளித்து ஒரு மகத்தான வெற்றியைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.