சென்னை

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய ஆலோசனை கூட்டம்

சென்னை

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் ஆலோசனை கூட்டம் ஆற்காடு ரோடு சாலிகிராமத்தில் நேற்று இணையத்தின் தலைவரும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.எஸ். ராஜேஷ், தலைமையில் மேலாண்மை இயக்குநர் அமலதாஸ், முன்னிலையில் நடைபெற்றது.

இதில் காகித, எழுது பொருட்கள், மற்றும் இந்துஸ்தான் லிவிர் தயாரிப்பு பொருட்களை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தில் கொள்முதல் செய்து அனைத்து பண்டகசாலைகளில் வினியோகம் செய்வது, மேலும் விற்பனையை அதிகரித்து லாபத்தை ஈட்டுவது என முதற்கட்டமாக சென்னையை சேர்ந்த கூட்டுறவு மேலாண்மை இயக்குநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் வடசென்னை நாம்கோ கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வியாசை எம்.இளங்கோவன், டி.யு.சி.எஸ்.கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கே.டி.தேவேந்திரன், பார்க் டவுன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் மோகன ரங்கன், ஆகியோர் பங்கேற்றனர்.