தற்போதைய செய்திகள்

தருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…

தருமபுரி:-

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று தருமபுரியில் அம்மாவின் திருவுருவ சிலையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன் தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது.

அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

வருகிற 24-ம்‘தேதி அம்மா பிறந்த நாள் விழாவில் நம் மாவட்டத்தில் ஒரு சிறப்பு இருக்கிறது. கடந்த 2001-2006-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலையை புரட்சித்தலைவி அம்மா நமது மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்ட கழக அலுவலகத்தில் திறந்து வைத்தார்.அதேபோல அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவில் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தருமபுரி மாவட்ட கழக அலுவலகத்திற்கு வந்து புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார்.அன்றைய தினம் அரூரை மையமாகக் கொண்டு நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சிறப்புரை ஆற்றுகிறார்.

இதனை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் உள்ள கொடிக்கம்பங்களை மாற்றியமைப்பது,புதிய வர்ணம் பூசுவது என்பதை செய்ய வேண்டும். எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இயக்கத்தையும் ஆட்சியையும் தமது இருபெரும் தலைவர்கள் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். கழக அரசை மற்ற மாநிலங்கள் பாராட்டி கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல விருதுகளை வழங்கி கொண்டிருக்கிறது. பல்வேறு நிறுவனங்கள், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி யை தமிழக முதலமைச்சர் நடத்தி கொண்டிருக்கிறது எனக்கூறுகிறது.

அம்மாவின் வழியில் கழக ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது 21 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல், பாண்டிச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றிபெற்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இது அத்தனையும் அம்மாவையே சாரும். அம்மாவின் ஆன்மா நம்மோடு இருக்கும் வரை இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். கழகத்திலுள்ள எவரும் மாற்று கட்சிக்குத் செல்லவில்லை. அ.இ.அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் இருக்கும் வரை இந்த இயக்கத்தை எவராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.

வருகின்ற மிகமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வெற்றிபெறக் கூடிய வகையில் நமது அத்தனை பேருடைய பணிகள் இருக்க வேண்டும். இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிபேரூராட்சி, நகராட்சி தலைமையிடங்களில் அம்மா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக முன்னோடிகள் அன்னதானம் செய்ய வேண்டும்,

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.