தமிழகம்

தருமபுரி மாவட்ட எல்லையில் முதலமைச்சர் துணை முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு…

தருமபுரி:-

தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மற்றும் துணை முதல்வருக்கு மாவட்ட எல்லையான தொப்பூரில் மாவட்ட கழகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்-மல்லிகா தம்பதியரின் மகன் டாக்டர் அ.சந்திரமோகன்-டாக்டர் வைஷ்ணவி ஆகியோருடைய திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி  காரிமங்கலம் கெரகோடஹள்ளி தானப்பகவுண்டர் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் ஓமலூர் காமலாபுரம் வந்திறங்கி அங்கிருந்து கார் மூலம் வருகை புரிந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மாவட்ட எல்லையான தொப்பூரில் மாவட்ட கழகத்தின் சார்பில், கழக விவசாயப் பிரிவு தலைவரும் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவருமான டி.ஆர்.அன்பழகன் தலைமையில் மலர்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் , மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாஹாகான், சார் ஆட்சியர் ம.ப.சிவன்அருள், முன்னாள் தருமபுரி ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தசாமி, நல்லம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன் நகர கழக செயலாளர் குருநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின் அங்கு கூடியிருந்த கழகத்தினர் மற்றும் பொதுமக்களிடையே தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பேசியதாவது:-

தமிழகத்தில் அம்மா வழியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம். அம்மா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசு அனைத்து மக்களையும் சென்றடையுமாறு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு அனைத்து ஏழை எளிய மக்களை சென்றடைந்துள்ளது.

அம்மா அறிவித்த திட்டங்கள் ,புதிய திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.கழக ஆட்சியில் நாங்கள் என்னென்ன சொல்கிறோமோ அதை விரைந்து செயல்படுத்தி வருகிறோம். அனைத்து திட்டங்களும் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறோம். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் பல நல்ல திட்டங்கள் அனைத்து துறை சார்பில் தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இங்கே வந்து இருக்கிறோம். நீங்கள் எல்லாம் எங்களுக்கு வெயிலையும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக வரவேற்பு அளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

பின்பு அங்கிருந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் , துணை முதலமைச்சர் ஆகியோருக்கு மலர் கொத்து கொடுத்து அமைச்சர் கே.பி.அன்பழகன் வரவேற்றார். மணமக்கள் டாக்டர் சந்திரமோகன் -டாக்டர் வைஷ்ணவி ஆகியோரை மலர்தூவி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.