தற்போதைய செய்திகள்

திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை:-

தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வெற்றிபெறாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வர்த்தக அணி மாநில தலைவர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்எல்ஏ, ஆவின் தலைவர் கே.பி ராஜு, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன், கழக செய்தி தொடர்பாளர் மகேஸ்வரி, லாலி ரோடு ராதா, எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்கள் மாநகர் மாவட்டம் கே ஆர் ஜெயராமன், புறநகர் மாவட்டம் இன்ஜினியர் ஆர்.சந்திரசேகர், சிங்கை வசந்தி, ராஜேஸ்வரி, பொன்னுச்சாமி, மாணிக்கம், லீலாவதி உண்ணி, புரட்சித் தம்பி, பகுதி செயலாளர்கள் விமல்சோமு, சின்னு என்கிற சின்னசாமி, புதூர் செல்வராஜ், டிஜே செல்வக்குமார், காலனி கருப்பையா, பாசறை பிரபாகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், சசிகுமார், கோவை பாரதி, வக்கீல் ஜெகதீஷ், எஸ்.ஆர் ரவி, தமிழ் முருகன், சாரமேடு பெருமாள், சிங்கை ஜான், பப்பாயா ராஜேஷ், பாலமுரளி, கமலக்கண்ணன், புஷ்பராஜ், தக்கடா ராஜேஷ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியதாவது;-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அ.தி.மு.கவின ஒவ்வொரு தொண்டனும் அம்மாவின் பிறந்த நாளில் ஏதாவது ஒரு நலத்திட்ட உதவி செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.அள்ளி கொடுத்த வள்ளல் புரட்சித்தலைவர் வழியில் அம்மாவின் பிறந்த நாள் கொடையுள்ளத்தோடு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.

அம்மா அவர்களின் வழித்தோன்றல்கள் கொடுத்து பழகி உள்ளோம். புரட்சித்தலைவர் வீட்டுக்கு சென்றால் முதலில் சாப்பிட்டீர்களா என வாஞ்சையுடன் கேட்டு அனைவரையும் முதலில் சாப்பிடச் சொல்வார். ஆனால் தி.மு.க தலைவர் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வந்தீர்கள் என கேட்பார். பிறந்தநாள் அன்று உண்டியல் வசூல் செய்பவர்கள் திமுகவினர். ‘

ஸ்டாலின் இப்போது ஓ.எம்.ஆர் குரூப் மூலம் ஒவ்வொரு ஊராக சென்று கட்சிக்காரர்களை முன்கூட்டி அழைத்து 5 பேர் கேள்வி கேட்கும் முறையில் கிராமசபை கூட்டம் நடத்தி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் கடந்த ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது செய்திருக்க வேண்டும். 12 ஆயிரத்திற்கும் மேல் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் இதுவரை ஸ்டாலின் பதவியில் இருந்தபோது சென்றது உண்டா கடந்த தேர்தலின்போது கரும்பு தோட்டத்தில் முன்கூட்டியே கான்கிரீட் தளம் போட்டு மக்களை ஏமாற்றியது போல், இந்த முறை கிராமசபை நாடகம் போட்டு மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் திமுக செய்த துரோகங்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மீண்டும் திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற முடியாது.

2006 முதல் 2011 வரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக மக்களுக்கு என்ன செய்தது தமிழினத்தை அடியோடு அளித்தது. தமிழக உரிமைகள் பறிக்கப் பட்ட போதும் ஆட்சி அதிகாரத்தில் திமுக இலங்கை தமிழர் கொல்ல காரணமாக இருந்தது. அன்று ராஜபக்சேவுடன் விருந்தில் தி.மு.க கனிமொழி தலைமையில் கலந்து கொண்டதை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் 40 தொகுதிகளையும் கைப்பற்றும்.

அம்மா உயிர் கொடுத்து இந்த ஆட்சியை உருவாக்கி உள்ளார்கள். அவர்கள் வழியில் கழக அரசு சிறப்பாக செயல்படும் என்றும் மக்கள் அரசாக இருக்கும் என பேசினார்.

கூட்டத்தின் முடிவில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.