தற்போதைய செய்திகள்

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூ. 45 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டடம் – அமைச்சர் பி. தங்கமணி திறந்து வைத்தார்…

நாமக்கல்:-

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டபட்ட கூடுதல் கட்டடத்தை அமைச்சர் பி. தங்கமணி திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டப்பள்ளி நியாயவிலைக்கடையில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி திறப்பு விழா நிகழ்ச்சியும், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் திறப்பு விழா நிகழ்ச்சியும் கழக பொதுக்குழு உறுப்பினரும், திருச்செங்கோடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான பொன்.சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி கலந்து கொண்டு திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டப்பள்ளி நியாயவிலைக்கடையில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடியினை திறந்து வைத்து, முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூ.45.00 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடத்தினை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பொ.பாலமுருகன், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் க.திருமூர்த்தி, இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் ப.ரவிக்குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.