தூத்துக்குடி

திருச்செந்தூர் கடலில் 3 நாள் குளிக்க தடை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

சென்னை:-

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் தீர்த்தமாடிவிட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் வானிலைசாதகமான சூழ்நிலையில் இல்லாததால் வரும் 3 நாட்களுக்கு திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் அடுத்த 3 நாட்களாக பக்தர்கள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.