மதுரை

திருப்பரங்குன்றத்தில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கழகம் வெற்றிபெறும் – வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி…

மதுரை:-

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கழகம் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும். தி.மு.க. எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் டெபாசிட் கூட கிடைக்காது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதிபட தெரிவித்தார்.

விருதுநகர் நாடாளுமன்ற தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள நிலையூர் பகுதியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதில் மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பூமிபாலகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சாரத்தின் போது மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது:-

அம்மாவின் அருளாசியோடு இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் விரும்பிய ஒரு மெகா கூட்டணியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் மாபெரும் வெற்றியை பெறும் விருதுநகர் நாடாளுமன்ற வேட்பாளராக அழகர்சாமி போட்டியிடுகிறார். இவருக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிக வாக்குகளை மக்களாகிய நீங்கள் அளிப்பீர்கள். இவர் உங்கள் நல்லாசியுடன் வெற்றிபெற்று நிச்சயம் மத்திய அரசின் திட்டங்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்குவார்.

தற்போது திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் மே 19ம்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்து உள்ளது. இந்த தொகுதியில் எப்போது தேர்தல் வந்தாலும் கழகத்திற்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். தி.மு.க., அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் அவர்கள் டெபாசிட் கூட பெற முடியாது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் வெற்றிபெறும்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா பேசினார்.