மதுரை

திருப்பரங்குன்றம் தொகுதியில் கழகம் அமோக வெற்றி பெறும் – நடிகர் கார்த்திக் உறுதி…

மதுரை:-

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறும் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து திருப்பரங்குன்றம் தொகுதியில் நடிகர் கார்த்திக் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். நான் அம்மா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தற்போது அம்மாவின் வழியில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். எனக்கு உடல்நிலை சரியில்லாத போதும், அம்மா மீது இருந்த பாசத்தின் காரணமாகவே பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன். தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை மக்களுக்கு தந்து மக்கள் நலன் காக்கும் அரசாக உள்ளது. எனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் கழக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார்.

இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கழக தகவல் தொழில்நுட்பபிரிவு இணை செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மதுரை புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, பொதுக்குழு உறுப்பினர் சக்திமோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உட்பட பலர் உடன் சென்றனர்.