மதுரை

திருப்பரங்குன்றம் பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு கல்வி உபகரணங்கள் – வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்…

மதுரை:-

திருப்பரங்குன்றத்தில் அம்மாவின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 1000 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு திருப்பரங்குன்றம் பகுதி இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் இரா.முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கழக துணை செயலாளர் நிலையூர் முருகன், பகுதி கழக செயலாளர்கள் எஸ்.முனியாண்டி, பன்னீர்செல்வம், வட்ட கழக செயலாளர்கள் பொன்முருகன், கோபால், திருநகர் பாலமுருகன், சுப்பிரமணி மற்றும் சொ.ராசு, நாகரத்தினம், கருப்பு, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாணவர்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். அதனால் தான் உங்களுக்கு மடிகணினியுடன் 14 வகை கல்வி உபகரணங்களை அம்மா வழங்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அம்மாவின் திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் வழங்கி வருகின்றனர். நடப்பு ஆண்டில் கூட பள்ளி கல்வித்துறைக்கு ரூ.28,500 கோடி வழங்கி உள்ளனர்.

இந்த 71-வது அம்மாவின் பிறந்தநாள் விழாவில் தற்போது அம்மாவின் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் மாணவர்களாகிய உங்களுக்கு நலத்திட்ட உதவிகளை துவங்கி உள்ளோம். நீங்கள் அம்மா அரசு வழங்கும் நல்திட்டங்களை பெற்று கல்வி அறிவில் மிகச்சிறந்து விளங்க வேண்டும்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.