தற்போதைய செய்திகள்

திருப்பூரில் காங்கேயம் ஒன்றிய கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்…

திருப்பூர்:-

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் புறநகர் மாவட்டம் காங்கேயம் ஒன்றிய கழகம் சார்பாக நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் புறநகர் மாவட்டம் காங்கேயம் ஒன்றிய கழகம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காங்கேயம் பெருமாள்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமையில் காங்கேயம் பெருமாள்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் காங்கேயம் ஒன்றிய அளவிலான 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்க்கு ரூ.26000 மதிப்புள்ள தலா 1 பவுன் தங்க நாணயங்களையும், கால் ஊனமுற்ற இரு நபர்களுக்கு தலா ரூ.75000 மதிப்புள்ள மூன்று சக்கர வாகனங்களையும் , காது கேளாதவர்களுக்கு ரூ.30000 மதிப்புள்ள காதொலிக் கருவிகளையும், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், கால்நடை பராமரிப்புதுறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் 71 வது பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு வழிபாட்டு தளங்களிலும் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட சிறப்பு பிரார்த்தனைகள், சிறப்பு வழிபாடுகள் செய்தும் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அன்னதானம் மற்றும் உயிர் காக்கும் பொருட்டு இரத்த தானம் முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள், நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் முதியோர்கள் உடல் ஊனமுற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடபட்டு வருகிறது. உலகத்திலேயே ஒரு தலைவருக்கு ஆண்டு முழுவதும் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்றால் அது புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு மட்டும் தான். பள்ளி மாணவ மாணவியர்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்தவர் அம்மா. இலவச பஸ் பாஸ் சீருடைகள்,மிதி வண்டி, மடிகணினி, கல்வி உபகரணங்கள் என எண்ணற்ற உதவிகளை அம்மா வழங்கினார்.

அம்மாவின் திட்டங்களினால் தமிழகத்தில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 44 சதவீதமாக உயர்ந்துள்ளது. அம்மா வழியில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கழகத்தின் ஆட்சியை கட்டி காத்து வருகின்றனர். விளையாட்டு துறையில் சாதனை படைப்பவர்களுக்கு உயர்கல்வியில் சலுகைகள் வழங்கப் பட்டு வருகிறது. அம்மாவின் மதி நுட்பத்தால் கழகம் 2014 ல் நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கியது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி அடைவது உறுதி. பொதுமக்கள் தங்கள் நல்லாதரவை கழகத்திற்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.