திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட கழக அலுவலகம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார்…

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தின் அலுவலகம் விரைவில் கட்டி திறக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். இதனையொட்டி திருவண்ணாமலையில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கழக அலுவலகத்தை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், திருவண்ணாமலையில் விரைவில் கழக அலுவலகம் திறக்கப்படும் என்று கூறியதால் தற்போது திறக்கப்பட்டது மேலும் வேங்கிக்கால் பகுதியில் கழகத்திற்கு சொந்த இடம் வாங்கி பெரிய அலுவலகம் திறக்கப்படவுள்ளது. இவ்வலுவலகத்தில் இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமிக்கவுள்ளோம். தங்கள் பகுதி பிரச்சினைகள் குடிநீர் பிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுக்கள் தரலாம். அதில் உங்கள் செல்போன் நம்பர் எழுதி கொடுக்க வேண்டும். பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு காணப்படும், இந்த கழக அலுவலகம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.இராமச்சந்திரன், கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ஜெ.செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எ.கே.அரங்கநாதன், நளினி மனோகரன், சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் குமாரசாமி, திருநாவுக்கரசு, நகர்ப்புற கூட்டுறவு வங்கி தலைவர் டிஸ்கோ எஸ்.குணசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் அமுதா அருணாசலம், எல்.என்.துரை, ஆரணி அரசு வழக்கறிஞர் க.சங்கர், வேலூர் மாவட்ட பால்கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பாரி பி.பாபு, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.