தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலையில் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலையில் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலையில் நகர கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருவூடல் தெருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:- 

அம்மா முதல்வராக இருந்த போது தாலிக்கு தங்கம், குழந்தை பேறுகால நிதியுதவி, பிறந்த குழந்தைக்கு அம்மா பரிசு பெட்டகம், பஸ் நிலையங்களில் பாலூட்டும் அறை என பெண்களுக்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பழுதடைந்திருந்த தங்கத்தேர் சீரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படவுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் புதிய பேருந்து நிலையம் திருவண்ணாமலையில் அமைக்கப்படவுள்ளது.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 27000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மடிகணினி, பாடப்புத்தகம், நான்கு செட் சீருடைகள், என எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அம்மா வழியில் ஆட்சி செய்யும் முதல்வர். துணை முதல்வர் ஆகியோர் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டம், கிராமத்தில் உள்ள ஏழ்மை நிலை பெண்கள் வாழ்வாதாரம் உயரும் வகையில் தலா 50 நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் என ஏராளமான திட்டங்களை செய்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல்வரும் துணைமுதல்வரும் அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சேினார்.