திருவண்ணாமலை

திருவண்ணாமலை-சென்னைக்கு ரயில் சேவை – கழக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உறுதி…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு ரயில் சேவை உறுதியாக கொண்டு வரப்படும் என கழக வேட்பாளர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வாக்காளர் களிடம் உறுதியளித்து உள்ளார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்கரிப்பூர், இசுக்கழிகாட்டேரி, பன்னியூர், நாரையூர், ஆங்குணம், ஆனானந்தல், மதுராம்பட்டு, அண்டம்பள்ளம், நவம்பட்டு, பழையனூர், காண்டியாங்குப்பம், பறையம்பட்டு, பாவுப்பட்டு, சு.பாப்பாம்பாடி, அல்லி கொண்டபட்டு உள்ளிட்ட 36 ஊராட்சிகளல் பா.ம.க, தே.மு.தி.க, பா.ஜ.க, புதிய நீதிக்கட்சி, கோகுல மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மக்களின் நலனுக்கு பாடுபடவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட எனக்கு இந்த வாய்ப்பை கட்சி மேலிடம் வழங்கியுள்ளது. மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டால் கீழ்கரிப்பூர் பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். தண்டரை ரயில்வே நிலையம் மேம்படுத்தப்படும்.

மலை மக்களின் நீண்டகால கோரிக்கையான திருவண்ணாமலை முதல் சென்னைக்கு பயணிகள் ரயில் சேவை உறுதியாக நிறைவேற்றப்படும். திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு ஏசி அறையுடன் கூடிய சொகுசு அறைகள் கட்டித்தரப்படும். தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்லும் திருவண்ணாமலை நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் விரைவில் அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாய மக்களின் நலனுக்காக ஏற்கனவே மூடப்பட்ட டான்காப் ஆலையில் விவசாயம் சார்ந்த, விவசாய மக்கள் பயன்பெறும் வகையில் நல்லதொரு விவசாய திட்டம் வல்லுநர்களின் ஆலோசனையோடு கொண்டு வரப்படும். அதேபோல பொதுமக்களின் எந்த கோரிக்கையாக இருந்தாலும் அந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற தருவேன்.

இவ்வாறு கழக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இந்த பிராச்சாரத்தில் கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் குமாரசாமி, மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், முன்னாள் ஒன்றிய சேர்மன் லதா தட்சணாமூர்த்தி, மோகன், சர்க்கரை, பா.ம.க மாநில துணை செயலாளர் காளிதாஸ், மாவட்ட செயலாளர் ஜானகிராமன், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் நேரு, நிர்மல், பி.ஜே.பி. மாவட்ட தலைவர் நேரு மற்றும் அதிமுக நிர்வாகிகள் டிஸ்கோ.குணசேகர், முரளிமோகன், இளவழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.