தற்போதைய செய்திகள்

திருவாரூரில் அமைச்சர் சூறாவளி பிரச்சாரம் – கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்…

திருவாரூர்:-

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஆர்.காமராஜ் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாகை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் தாழை எம்.சரவணன், திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம் ஆகியோரை ஆதரித்து திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிங்களம் சேரி, தேவர் கண்ட நல்லூர், குளிக்கரை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஏழை, எளிய பாமர மக்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள் அனைவரும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தவிர மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று என்னென்ன கோரிக்கைகளை சொல்கிறார்களோ அதன்படி தேர்தல் முடிந்த பிறகு அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு நல்லாட்சியில் அனைத்து துறைகளுக்கும் அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்வித்துறையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து மாணவ, மாணவிகள் முன்னேற வேண்டும் என்பதற்காக காலணி முதல் கணினி வரை வழங்கி கவுரப்படுத்தி கொண்டிருக்கிறது.

அதேபோல ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பட்டம் பட்டயம் படித்த ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு உதவியாக 8 கிராம் தங்கமும் திருமண உதவித் தொகையும் வழங்கி எண்ணற்ற ஏழை குடும்பங்களில் வாழ்வாதாரத்தை முன்னேறும் வகையில் செயலாற்றி கொண்டே இருக்கிறது. எனவே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

பிரச்சாரத்தின்போது நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோபால், ஒன்றிய கழக செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் செந்தில் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.