தற்போதைய செய்திகள்

தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் விரைவில் காணாமல் போகும் – டாக்டர் ராமதாஸ் உறுதி…

விழுப்புரம்:-

தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் விரைவில் காணாமல் போகும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலைக்கு ஆதரவாக ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாட்டார்மங்கலம் மற்றும் செஞ்சி பகுதியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் பிரச்சாரம் செய்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

இந்த பிரச்சாரத்தின் போது பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், 

கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் பேசுகையில், இக்கூட்டணியானது மகளிரின் ஆதரவு உள்ள கூட்டணி. தேர்தல் வந்தால் காங்கிரஸ் திமுக மீது சவாரி செய்யும். தேர்தல் முடிவில் இரண்டு கட்சிகளும் காணாமல் போகும். விவசாயிகளின் ஆதரவான கூட்டணி நம் கூட்டணி. செஞ்சி, மயிலம் தொகுதிகள் இக்கூட்டணியின் கோட்டை. செஞ்சி சேவல் ஏழுமலைக்கு அதிக வாக்குகள் அளிப்பதில் செஞ்சி தொகுதிக்கும், மயிலம் தொகுதிக்கும் தான் போட்டி. திமுக பொருந்தா கூட்டணி. செஞ்சி ஏழுமலை வெற்றி நம் கூட்டணி ஏற்பட்ட போதே முடிவானது. கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் எதிர்க்கட்சி வேட்பாளர் டெபாசிட் வாங்க மாட்டார்கள். இதற்காக நாம் அனைவரும் சிறப்பான களப்பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் விநாயகமூர்த்தி, சேகரன், கோவிந்தசாமி, புண்ணியமூர்த்தி,கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சேர்மன் அண்ணாத்துரை, கூட்டுறவு சங்க தலைவர்களான ரங்கநாதன், புலியனூர் விஜயன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகதீசன், அனந்தபுரம் நகர செயலாளர் அரிராமன், கூட்டணி கட்சி நிர்வாகிகளான வெங்கடேசன், சுந்தரேசன், சிவக்குமார், முருகன், ராஜேந்திரன், அருள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.