தற்போதைய செய்திகள்

தி.மு.க.- காங். கூட்டணியை ஓட ஓட விரட்டியடியுங்கள் – வாக்காளர் பெருமக்களுக்கு சரத்குமார் வேண்டுகோள்

திருநெல்வேலி

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை ஓட ஓட விரட்டியடியுங்கள் என்று வாக்களர்களுக்கு ச.ம.க. தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து களக்காடு ஒன்றியம் சலவையர் குளத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் ஆர்.சரத்குமார் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாங்குநேரி தொகுதி மக்கள் பணி செய்வார் என்று நம்பி தேர்தலில் இறக்குமதி செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் நடந்தது என்ன? வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானதும் வசந்தகுமார் பதவிக்கு ஆசைப்பட்டு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கன்னியாகுமரியில் போட்டியிட்டு எம்.பி.யாகி விட்டார். தனக்கு வாக்களித்த நாங்குநேரி தொகுதி மக்களுக்கு துரோகம் செய்து அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்.

இங்கு போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் உள்ளூர் வேட்பாளர். உங்கள் வீட்டு பிள்ளையாக கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இறக்குமதி செய்யப்பட்டவர். ெசாந்த ஊர் கன்னியாகுமரி, சென்னையில் வசிக்கிறார். அவரை சாதாரண மக்களால் பார்க்க முடியாது.

நாங்குநேரி தொகுதிக்கு துரோகம் செய்து விட்டு சென்ற காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் மக்களை ஏமாற்ற திட்டமிட்டுள்ளனர். எனவே துரோக கூட்டணியான தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு மரண அடி கொடுத்து ஓட ஓட விரட்டிக்க வேண்டும். இத்தொகுதியின் மண்ணின் மைந்தரான கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனுக்கு வெற்றி சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் பேசினார்.

பிரச்சாரத்தின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் முருகன், கோவில்பட்டி நிலவள வங்கி தலைவர் ரமேஷ், இனாம் மணியாச்சி கூட்டுறவுவங்கி தலைவர் மகேஷ்குமார், தூத்துக்குடி- நெல்லை ஆவின் பால் இயக்குனர் நீலகண்டன், பரும்புக்கோட்டை பாலமுருகன் மற்றும் பலர் உடன் சென்றனர்.