சிறப்பு செய்திகள்

தி.மு.க. மக்கள் விரோத கட்சி பெண்களுக்கு எதிரான கட்சி – பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு…

கோவை:-

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள தி.மு.க. ஒரு மக்கள் விரோத கட்சி. பெண்களுக்கு எதிரான கட்சி. புரட்சித்தலைவி அம்மா அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த கட்சி. அந்த கட்சிக்கு வாக்காளிக்காதீர்கள். மக்கள் வளம்பெற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்தார்.

கோவையில்  நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது-

தமிழகம் கலாச்சாரமும், உயர்ந்த பண்புகளும், நாகரிகமும் கொண்ட நாடு. தமிழ்மொழி உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த அருமையான பூமியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ,புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் தமிழக மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேர்தலாகும். தமிழக மக்களின் நலனை கருதி தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணி நாட்டை பாதுகாப்பதற்கும், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் உங்கள் முன்னே வாக்கு கேட்டு நிற்கிறது.

ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியோ மக்களுக்கு எதிரானதாகும். நாம் சேவை செய்ய வாக்கு கேட்கிறோம். எதிர்க்கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்ற வாக்கு கேட்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். பாதுகாப்புக்காக ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தமிழகத்தில் அமைய இருக்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சொல்லிக்ெ காள்ள விரும்புகிறேன்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது நாட்டின் பாதுகாப்பை பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நாடு முழுவதும் நடைபெற்றது. 1998-ம் ஆண்டு இங்கு தி.மு.க. ஆட்சியும், டெல்லி்யில் காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்றது. அப்போது தான் கோவையில் சரமாரியாக குண்டுவெடித்து 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தொடர்ந்து நடைபெற்ற வெடிகுண்டு சம்பவங்களை தடுக்க காங்கிரஸ் கூட்டணி அரசு தவறி விட்டது.

ஆனால் உங்கள் ஆதரவோடு மத்தியில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தீவிரவாத தாக்குதல்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில் தான் ஏழை நடுத்தர மக்களின் நலன்கள் பாதுக்கப்பட்டு அவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

குறிப்பாக மின்சாரம், ஓய்வூதிய திட்டம், காப்பீட்டு திட்டம் போன்றவைகளை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பணக்காரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதே தவிர ஏழை, நடுத்தர மக்களை பற்றி அவர்கள் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. மத்திய தர குடும்பங்களை நசுக்கும் விதமாக அந்த தேர்தல் அறிக்கை உள்ளது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டு போடுவது பணக்காரர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் சாதகமாக அடைந்து விடும். அது நடுத்தர ஏழை மக்களுக்கு பயனளிக்காது.

இந்த கோவை மாநகரம் தொழில்கள் நிறைந்த நகரமாகும். உங்களின் காவலனாக செயல்படும் இந்த அரசு சிறு மற்றும் குறு தொழில்களை காப்பதற்கும் ஜி.எஸ்டி. வரியில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை கொண்டு வர எப்போதும் தயாராக இருக்கிறது. நெசவாளர்களுக்கு உங்களின் அரசு ரூ.7000 கோடி வரை ஒதுக்கீடு செய்து பல நன்மைகளை செய்திருக்கிறது. இதில் 60 சதவீதம் தமிழக நெசவாளர்கள் தான் பயனடைந்திருக்கிறார்கள். 7 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்ந்து வழங்கப்படும்.

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பெண்களுக்கு எதிரான கூட்டணியாகும். தி.மு.க. ஒரு மக்கள் விரோத கட்சி. அதன் தலைவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களை எவ்வளவு தரக்குறைவாக பேசினார்கள் என்பதும் அம்மா அவர்களை எவ்வளவு மோசமாக விமர்சித்தார்கள் என்பதையும் நான் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. தண்ணீர் பற்றாக்குறை பெரும் சவாலாக இருக்கிறது. இதற்காக நாம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நதிகள் இணைப்பு, மழைநீர் சேமிப்பு போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதற்கென தனி அமைச்சகமே செயல்பட்டு வருகிறது.

இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள் பல கோடி பேர் முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறார்கள். நீங்கள் பள்ளிக்கு சென்றதும் முதன் முதலாக பேசியதும், வேலைக்கு சென்றதும், முதல் சம்பளம் வாங்கியதும் எப்படி மறக்க முடியாத நாட்களோ அதேபோல நீங்கள் வாக்களிக்கப்போவதும் மறக்க முடியாத சம்பவமாகும்.

நீங்கள் முதல் மாத சம்பளம் வாங்கியதும் எப்படி நல்ல காரியத்திற்காக செலவிடுவீர்களோ அதேபோல் உங்களின் முதல் ஓட்டுக்களை நல்லவர்களுக்கு செலுத்துங்கள். நாட்டின் நலனுக்காக யார் பாடுபடுகிறார்கள். நாட்டின் பாதுகாப்புக்கு யார் சேவை செய்கிறார்கள், யார் மக்களின் காவலனாக இருக்கிறார்கள். யார் இந்த நாட்டை சிறப்பான முறையில் பாதுகாப்பாக வழிநடத்தி செல்வார்கள் என்பதை உணர்ந்து உங்களுடைய வாக்குகளை செலுத்துங்கள். நீங்கள்செலுத்த இருக்கின்ற வாக்குகள் அனைத்தும் இந்தியாவை வளமிக்க, பலமிக்க நாடாக உருவாக்கும். பிரிவினைவாதிகளுக்கும், குடும்ப அரசியல் வாதிகளுக்கும் உங்கள் வாக்குகளை செலுத்தாதீர்கள். ஏனென்றால் உங்களின் முதல் வாக்கு நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் வளம், நாட்டின் செல்வம், நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு உதவட்டும்.

வரும் 18-ந்தேதி உங்கள் வாக்குகளை புரட்சித்தலைவி அம்மா கண்ட இயக்கத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செலுத்துங்கள் என அன்போடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

நாளை நமதே, நாற்பதும் நமதே.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார். இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய கழக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பிரதமருக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற பிரதமர் வாழ்த்தினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி தலைவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.