கோவை

தி.மு.க.வின் குற்றச்சாட்டை மக்கள் ஏற்க மாட்டார்கள் – பொள்ளாச்சி கழக வேட்பாளர் சி.மகேந்திரன் பேச்சு…

கோவை:-

தி.மு.க.வின் பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் சி.மகேந்திரன் கூறினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் சி.மகேந்திரன் மற்றும் சட்டப்பேரவை துணைத்தலைவரும், கனழக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் பொள்ளாச்சி கிழக்கு ஒன்றியம் தாட்கோ காலனி, வடக்கிபாளையம் பிரிவு, ஆச்சிப்பட்டி, ஆர்.பொன்னாபுரம், காபுலிபாளையம், சந்தேகவுண்டன் பாளையம், நஞ்சேகவுண்டன் புதூர், ஒக்கலிபாளையம், போத்தனூர், குள்ளக்காபாளையம், குரும்பாளையம், பனிக்கம்பட்டி , புளியம்பட்டி, ராசக்காபாளையம் ஆகிய ஊர்களில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கழக வேட்பாளர் சி.மகேந்திரன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கழக ஆட்சியில் பொள்ளாச்சி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வந்த பொள்ளாச்சி சாலையில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் ஆலோசனையின்படி பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.500 கோடி மதிப்பீட்டில் பொள்ளாச்சி முதல் கோவை வரையிலான சாலை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.ரூ 3,500 கோடி மதிப்பில் பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தென்னை விவசாயிகளின் நலன்காக்கும் வகையில் 11 முறைக்கு மேல் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து கொப்பரை தேங்காய் விலை உயர்வை பெற்று தரப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பாலங்கள், அனைத்து சாலைகள் விரிவாக்கம், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், அரசு கலை கல்லூரிகள் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாம் அமைத்துள்ள வலுவான கூட்டணியை பார்த்து பயந்து போன தி.மு.க. தேர்தல் நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறது. அதனை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பாரத பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் வலிமையான ஆட்சி அமையவும், மத்திய, மாநில அரசின் மக்கள் திட்டங்கள் தொடரவும், இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றிபெற செய்யவேண்டுகிறேன்.
இவ்வாறு கழக வேட்பாளர் சி.மகேந்திரன் பேசினார்.

ஒன்றிய செயலாளர் தம்பு என்கிற தாமோதரன், தேமுதிக பனப்பட்டி தினகரன், கழக நிர்வாகிகள் என்.ஆர்.ராதாமணி, ரங்கநாதன், ஓகே முருகன், மணிசேகர், மனோகரன், பார்த்தசாரதி, இளங்கோ, காலிங்ராஜ், சதீஷ், தியாகராஜன்,பரமசிவம், பழனிச்சாமி, பாலன், சிடிசி துரை, ஜெயக்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானேர் உடன் சென்றனர்.