தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள் – ஈரோட்டில் அமைச்சர் கே.சி.கருப்பணன் உறுதி…

ஈரோடு

தி.மு.க.வின் பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பிரச்சாரம் செய்து பேசினார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு(எ) ஜி.மணிமாறனை ஆதரித்து மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையிலும் ,சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ முன்னிலையிலும், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெரிய அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம் பகுதிகளில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.

அப்போது அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். மக்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் அம்மா ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. ரூ .65.64 கோடி மதிப்பில் மின்புதை வடக்கம்பி அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தி.மு.க பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்ற வருகின்றது. மக்கள் ஏமாற மாட்டார்கள். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பொங்கல் பரிசாக ரூ.1000 அனைத்து குடும்ப அட்டைகளுக்கு வழங்கினார். நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் எதிரிகளை முறியடிக்க வலிமையான பிரதமரான நரேந்திரமோடியின் நல்லாட்சி தொடர வேண்டும். கழக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களித்து பொதுமக்கள் நல்லாதரவை வழங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் பகுதிக் கழக செயலாளர்கள் பி.கேசவமூர்த்தி, ஜெயராஜ் (எ) முனுசாமி, முருகுசேகர், கே.எஸ்.நல்லசாமி, கே.ஆர்.ஜான், சம்பத் நகர் ஜெகதீசன், தெய்வநாயகம், கே.ஆர்.ரத்தன் பிரித்திவி, எஸ்.வீரக்குமார், ஈரோடு குணசேகரன், கேபிள் நடராஜன், மாது (எ) மாதையன், எஸ்.டி.தங்கமுத்து, எம்.கே.ராஜா, சி.எஸ்.சிவக்குமார், என்.நநதகோபால், அருள்முருகன், எஸ்.ஆர்.ஜி.மூர்த்தி, சேரன் சேனாதிபதி, ஜெமினி ஜெகதீசன், காஜாமைதீன், வி.கருப்பணன், உதயகுமார், முனாஜ், ஈரோடு டி.கலையரசன், சந்தானம், ஈகிள் சதீஸ், வி.பி.இளங்கோ, ஏ.ராமசாமி, சின்னு, ராதாகாந்த், ஆண்டவர் (எ) பழனிசாமி, சிவதாணு, பெருமாள், சூரியசேகர், கஸ்தூரி, பாலாஜி (எ) மோகன்குமார், சரளாதேவி, ஜெயராஜ், தர்மலிங்கம், ஜெயராமன், அப்துல்காதர், பாப்பாத்திமணி, ஜெயலட்சுமி மோகன், ஆர்.ஜி.கார்த்திக், காவேரிசெல்வன், ராஜி, சம்பத்குமார், தீரன்செந்தில், அழகேசன், ராசு மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.