நீலகிரி

தி.மு.க.வுக்கு முடிவுரை எழுத வைகோ கூட்டு சேர்ந்துள்ளார் – திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தாக்கு…

மேட்டுப்பாளையம்:-

கருணாநிதியை போல் விஞ்ஞான ரீதியில் திருடுபவர் ஆ.ராசா என்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசினார்.

மேட்டுப்பாளையம் நகர கழகம் சார்பில் நகர செயலாளர் வான்மதிசேட் தலைமையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த பிரச்சார கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது;-

காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் கட்சி எப்படி காணாமல் போனதோ. அதுபோல் தமிழ்நாட்டில் கருணாநிதிக்கு பிறகு தி.மு.க காணாமல் போகும். தி.மு.க சார்பில் நீலகிரிநாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசா வந்து கடந்த 2009 தேர்தலில் வெற்றிபெற்று நீலகிரி தொகுதியை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு 2ஜி ஊழல் செய்து விட்டு சென்றவர். அவர் மீண்டும் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். கருணாநிதியை போல் விஞ்ஞான ரீதியில் திருடுபவர் ஆ.ராசா.

இன்றைய சூழல் போல் ஊடகங்களும் பத்திரிகைகளும் சமூக வலைத்தளங்களும் ஸ்டாலின் இளமை பருவத்தில் இருந்திருந்தால் தமிழகத்திற்கு இன்றைய எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்திருக்க முடியாது. ஆட்சியில் இல்லாத போதே மக்களை மிரட்டி வருபவர்கள் தி.மு.க.வினர். ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்களின் நிலையை நினைத்து ஓட்டு போடுங்கள். அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணி பலத்தை பார்த்து தோல்வி பயத்தில் ஸ்டாலின் உளறுகிறார்.

பாலக்கோட்டில் குண்டு வெடித்தது என்று சொல்வதற்கு பதிலாக பாலக்காட்டில் குண்டு வெடித்தது என்று உளறி வருகிறார். தி.மு.கவை முடித்து வைக்க வைகோ கூட்டணி சேர்ந்துள்ளார். அவர் சென்ற இடம் அனைத்தும் பாதாளத்திற்கு சென்று விடும். அதுபோல் தி.மு.க.வும் விரைவில் பாதாளத்துக்கு சென்று விடும்.

இவ்வாறு ஆர்.வி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி. பேசுகையில், கடந்த 2009 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு கடந்த 5 ஆண்டு காலமாக தொகுதி பக்கம் வராமல் தேர்தல் வந்த பிறகு இப்பேது வந்து நாடகம் நடத்தி வருபவர் ஆ.ராசா. தொகுதிக்கு சற்றும் கூட சம்பந்தம் இல்லாத ராசா இங்கு நான் அதை செய்தேன். இதை செய்தேன் என்றும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். மேட்டுப்பாளையம் தொகுதி அ.இ.அ.தி.மு.கவின் கோட்டை. இங்கு யார் வந்து போட்டியிட்டலும் தோற்று தான் போவர்கள். அம்மாவின் வழியில் ஆட்சி செய்யும் கழகத்தை யாராலும் அசைக்க முடியாது என்றார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் நகர துணை செயலாளர் எம்.என்.பாலன், நகர பொருளாளர் அமானுல்லா, ஜெய்சங்கர் கே.ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி, வெள்ளியங்கிரி நகர அவைத்தலைவர் பி.ஆர்.சுப்பையன், சலீம், பா.ஜ.க.வை சேர்ந்த உமாசங்கர், பா.ம.க நகர செயலாளர் ஷாஜகான், தே.மு.தி.க சோமசுந்தரம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.