சிறப்பு செய்திகள்

தீபாவளி கொண்டாடவா நாங்கள் அணுகுண்டு வைத்திருக்கிறோம் – பாகிஸ்தானுக்கு மோடி கேள்வி…

ஜெய்ப்பூர்:-

தீபாவளி கொண்டாடவா நாங்கள் அணுகுண்டு வைத்திருக்கிறோம் என்று பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், பார்மெர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘கடந்த 1971-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது நம்மிடம் சரணடைந்த 90 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை வைத்தே காஷ்மீர் பிரச்சினையை அன்றைய மத்திய அரசு தீர்த்திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் அரசு அந்த வாய்ப்பை தவற விட்டது.

பாகிஸ்தானின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்ற கொள்கையை எங்கள் அரசு முன்னெடுத்துள்ளது. ‘எங்களிடம் அணுகுண்டு பொத்தான் உள்ளது. எங்களிடம் அணுகுண்டு பொத்தான் உள்ளது’ என்று பாகிஸ்தான் முன்பெல்லாம் தினந்தோறும் கூறிக் கொண்டிருந்தது.

அப்படியானால், நாம் வைத்திருப்பது என்ன? நம்மிடம் இருக்கும் அணுகுண்டுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நாங்கள் என்ன தீபாவளி கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கிறோம்?’ என கேள்வி எழுப்பினார்.