சிறப்பு செய்திகள்

தீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

தீபாவளி பண்டிகையையொட்டி 28-ந்தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

27.10.2019 அன்று தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊருக்கு சென்று மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 28.10.2019 (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து தீபாவளிக்கு அடுத்த நாள் 28.10.2019 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 9.11.2019 (இரண்டாம் சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.