சென்னை

துறைமுகம் பகுதிக் கழகம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி – மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா வழங்கினார்…

சென்னை:-

சென்னை துறைமுகம் பகுதி கழகம் சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தின் போது ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா வழங்கினார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை துறைமுகம் பகுதி 56-வது வட்டம் ஜில்ஸ் தெருவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இ்ந்நிகழ்ச்சிக்கு 56-வது வட்டக் கழக செயலாளர் பி.டி.சேகர் தலைமை தாங்கினார். துறைமுகம் பகுதி கழக செயலாளர் எம்.கன்னியப்பன் முன்னிலை வகித்தார்.

இதில் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா கலந்து கொண்டு 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கழக மாணவரணி செயலாளரும், நாடாளுமன்ற கொறடாவுமான எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி, தலைமைக்கழக பேச்சாளர்கள் பிராட்வே எல்.குமார், பி.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட, வட்ட, பகுதி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.