தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமித்ஷா, முதல்வர் பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட கழகத்தினர் முடிவு…

தூத்துக்குடி:-

கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்கும் பிரச்சார கூட்டத்தில் திரளானோர் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம். விளாத்திக்குளம் வேம்பார் ரோட்டில் உள்ள கழக தேர்தல் பணிமனையில் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும் அமைச்சருமான. கடம்பூர் செ.ராஜூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது;-

தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன், விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து இன்று பா.ஜ.க. தேசியத்தலைவர் தலைவர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசும் தேர்தல் பிச்சார கூட்டத்திற்கு வடக்கு மாவட்டத்தில் இருந்து 700 வேன்களில் கழகத்தினர் திரளாக பங்கேற்கின்றனர்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நாளை மாலை 4 மணிக்கு எட்டையாபுரம் புதூர். நாகலாபுரம், சூரங்குடி, வேம்பார் உட்பட்ட பகுதிகளில் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் சின்னப்பனுக்கு இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கின்றார் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க நான் மற்றும் கழக அமைப்பு செயலாளர்களான சி.த.செல்லப்பாண்டியன், சின்னத்துரை. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி குட்லக். செல்வராஜ் உள்பட கழகத்தினர் ஏற்பாடு செய்து வருகிறோம். கழக வேட்பாளர் சின்னப்பனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள். சி.த.செல்லப்பாண்டியன். சின்னத்துரை, ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், விளாத்திக்குளம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி குட்லக் செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் பிச்சையா, ஒன்றிய செயலாளர் பால்ராஜ், கழக செயற்குழு உறுப்பினர் குமாரத்தாய், புதூர் ஒன்றிய கழக செயலாளர் ஞானகுருசாமி, புதூர் ஒன்றிய முன்னாள் சேர்மன். தனஞ்செயன், பரும்புகோட்டை பாலமுருகள், நீலகண்டன். விளாத்திக்குளம் நகர செயலாளர் நெப்போலியன், குளத்தூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சாந்தி, எட்டையாபுரம் நகர செயலாளர் செல்வி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், போக்குவரத்து பிரிவு செயலாளர் சங்கர், போஸ், சாம் கவுதம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.