தூத்துக்குடி

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

தூத்துக்குடி

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வியாழக்கிழமை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மஹா புயல் மற்றும் புல்புல் புயல் காரணமாக மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் அதிக பாதிப்பு இருக்கும் என்ற நிலையில், மன்னாா் வளைகுடா பகுதியில் அதிக காற்று வீசக்கூடும் என்றும், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், புயல் குறித்தும், அதிக காற்று வீசக்கூடும் என்பது குறித்தும் கப்பல்களுக்கு எச்சரிக்கும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. தூத்துக்குடி கடல் பகுதியில் 60 கிலோ மீட்டா் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கவனமாக இருக்கும்படி மீன்வளத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.