திருவண்ணாமலை

தெள்ளார் கிழக்கு ஒன்றியத்தில் 11000 பேருக்கு புதிய உறுப்பினர் அட்டை – தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்…

திருவண்ணாமலை

தெள்ளார் கிழக்கு ஒன்றியத்தில் 11000 பேருக்கு புதிய உறுப்பினர் அட்டையை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் தெள்ளார் கிழக்கு ஒன்றிய கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா தெள்ளாரில் நடைபெற்றது. இந்த விழாவில் வடக்கு மாவட்ட செயலாளரும், செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் பங்கேற்று கழக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

அப்போது தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றிபெற முடியாமல் போய் விட்டது. தேர்தலின் போது கழக நிர்வாகிகள் கடுமையாக உழைத்தீர்கள். திமுகவினர் மக்களிடம் பொய்யான வாக்குறுதி அளித்ததன் காரணமாக தோல்வியை சந்திக்க நேரிட்டது. புதிய உறுப்பினர் அட்டைகளை கிராமந்தோறும் சென்று கழக உறுப்பினர்களிடம் வழங்க வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் உத்தரவிட்டதின் பேரில் ஒன்றியம் தோறும் கழக நிர்வாகிகளை கூட்டி தருகிறோம். கழக நிர்வாகிகள் அவரவர் சேர்த்த உறுப்பினர்களை அழைத்து அவர்களிடம் உறுப்பினர் அட்டைகள் சேரும் வகையில் செய்து விடுங்கள்.

உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடக்கவுள்ளது. அதற்குள் கட்சியினர் தங்கள் பகுதியில் தேர்தல் பணிகளை துவங்கி விடுங்கள். இத்தேர்தலில் எதிரிகளுக்கு வெற்றியை தராதீர்கள். ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெற்றால் தான் வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளார் பச்சியப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டிகேபி.மணி, ஒன்றிய பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், மாவட்ட இணை செயலாளர் விமலாமகேந்திரன், இளைஞரணி ராஜேஷ்கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.